தமிழர் நெஞ்சங்களை கனக்கச் செய்த மாவீரர் நாள்..! நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை
மாவீரர் நாள் நினைவேந்தல் நேற்றைய தினம் இலங்கையில் 25 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
இதில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன், தங்களின் மகள் மற்றும் மகனுக்காகத் தாய்மார்கள் உணவுகளைச் சமைத்துக்கொண்டு வந்து, அவர்களின் நினைவிடங்களுக்கு முன்னர் வைத்து பிரார்த்தனை செய்தார்கள்.
இப்படியொரு பக்கம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், சட்ட விதிமுறைகள் மீறப்படுகின்றனவா என்ற கண்ணோட்டத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழர் பகுதிகளில் பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட அமைப்புகளை மக்களிடையே கொண்டுசேர்க்கும் நடவடிக்கைகள் மாத்திரமே தடைசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.
மக்களின் வலிகளைப் புரிந்துகொண்டு, நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஒரு சாதகமான பலனாக மாறியிருக்கின்றது.
இதுபோன்று நேற்றைய தினம் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற விடயங்களை விளக்கமாக, செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
யுத்தத்தின் பின் உயர்தர மாணவிக்கு நேர்ந்த அவலம்.. 15 வருடங்களுக்கு பிறகு வெளியான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாட்டுக்கு ஆபத்து..! அரசாங்கத்திற்கு பைசர் முஸ்தபா எம்.பி. எச்சரிக்கை