நாளை மீண்டும் வேலைநிறுத்தம்..! அரசாங்கத்திற்கு தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
அரசாங்கத்தின் கோரிக்கைகளையும் மீறி, நாளைய தினம்(30.11.2026) திங்கட்கிழமை திட்டமிட்டபடி பணி நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசத்துறை தொழிற்சங்கங்கள் மீண்டும் உறுதியாக அறிவித்துள்ளன.
கல்வி, சுகாதாரம், நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளன.
அவற்றின் முக்கிய கோரிக்கைகளாக, 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை வழங்குதல், சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்வி நிலை பாதிப்பு
அதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள், தமது உறுப்பினர்கள் திங்கட்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் பாடசாலைகளில் நடைபெறவுள்ள பரீட்சை நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறினால், தொழிற்சங்க நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரி, டிசம்பர் 1ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்திப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கும் பல தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இந்தச் சூழ்நிலையில், நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைப்பதைத் தவிர்க்குமாறு பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த தொழிற்சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர் நெஞ்சங்களை கனக்கச் செய்த மாவீரர் நாள்..! நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை