கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது..!
கிளிநொச்சி - தருமபுரம் நாதன் குடியிருப்புப் பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை நேற்று (28.11.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடம் இருந்த 2 கிராம் 37 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 22 போதை மாத்திரைகள் மற்றும் தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணையின் பின்னர் இன்று (29.11.2026) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.