காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து : 15 வயது மாணவன் பலி
கம்பளை - புஸ்ஸல்லாவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பளை நகரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாடகை முச்சக்கரவண்டி ஒன்றும், புஸ்ஸல்லாவையிலிருந்து கம்பளை நோக்கிப் பயணித்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த 15 வயதுடைய ஆர். தர்ஷனன் என்ற பாடசாலை மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கார் சாரதி கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.