லெபனான் மீது அதிரடி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் விமானப்படை
தெற்கு லெபனானின்(Lebanon) கபீர் டீப்நைட் பகுதியில் உள்ள உம் தூட் என்ற கிராமத்தில் இஸ்ரேல் விமானப்படையினர் நேற்று(16) அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததோடு அவர்களி்ல மூவர் குழந்தைகள் எனவும், பலியான அனைவரும் சிரியாவை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பதிலடி தாக்குதல்
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுக்கும் வகையிலே இவ் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |