அம்பாறையில் இடம்பெற்ற ஜனாதிபதி புலமைப்பரிசில் நிகழ்வு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய அம்பாறை மாவட்டத்திற்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் நடைபெற்றுள்ளது.
குறித்த வைபவம், அக்கரைப்பற்று ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அரங்கத்தில் இன்று (17.07.2024) இரண்டு கட்டங்களாக இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, காலை ஒரு அமர்வு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் தலைமையிலும் நண்பகல் மற்றுமொரு அமர்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தலைமையிலும் இரு பிரிவுகளாக சிறப்பாக நடைபெற்றுள்ளன.
பிரதம அதிதிகள்
அபிவிருத்தி லொத்தர் சபையின் அனுசரணையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் மாணவர்கள், மாணவர்களது பெற்றோர் என பெருந்திரலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
