ஈரானின் 7 நாள் திட்டம்: மத்தியஸ்தர்களுடன் தீவிரமாகப் பேச்சு என்கிறார் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர்
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரானின் 7 நாள் திட்டம் குறித்து மத்தியஸ்தர்களுடன் தீவிரமாகப் பேசி வருவதாக, ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், தகுந்த நிபந்தனைகள் எட்டப்பட்டால் சர்வதேச அளவில் மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை கடல் வழிப்பாதை மீண்டும் திறக்கப்பட்டு, அமைதி மீட்டெடுக்கப்படும் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராஜதந்திர முயற்சி
"எங்கள் ஆயுதப் படைகள் தாய்நாட்டைப் பாதுகாக்க முழுத் தயார்நிலையுடன் இருக்கும் அதேவேளையில், இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈரான் தொடர்ந்து வாய்ப்பளிக்கிறது" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடினார்.

இராஜதந்திர பேச்சுவார்த்தை
அப்போது, மெக்கா கூட்டுப் பாதுகாப்பு கூட்டணி, ஹோர்முஸ் நீரிணை மற்றும் யேமன் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ட்ரம்பிடம் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
பிராந்திய மோதல்களுக்கு இராணுவ நடவடிக்கையை விட இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான தீர்வைக் காண துருக்கி முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் ட்ரம்பிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.