ஈரான் போர் எதிரொலி: எரிசக்தி விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தீவிரம்!
ஈரானுடனான போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
இது ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ள நிலையில், எரிசக்தி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரத் தீர்வுகளைக் கண்டறிய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
போரினால் ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய வர்த்தகப் பாதைகள் முடங்கியுள்ளதால், விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணம்
இதன் விளைவாக, ஐரோப்பிய நாடுகளில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது, இது சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தி வருகிறது.

இந்த விலை உயர்விலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், தொழிற்சாலைகள் முடங்குவதைத் தவிர்க்கவும் ஐரோப்பியத் தலைவர்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, எரிசக்தி விலைக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது, பிற நாடுகளிலிருந்து மாற்று வழிகளில் எரிவாயுவை இறக்குமதி செய்வது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பது போன்ற திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
கோரிக்கை
அமெரிக்காவின் போர்க்கால கோரிக்கைகளை ஏற்க மறுத்துள்ள ஐரோப்பா, தற்போது தனது சொந்தப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதிலும், எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

எதிர்வரும் குளிர்காலத்திற்குள் போதிய எரிசக்தி கையிருப்பை உறுதி செய்யத் தவறினால், ஐரோப்பா பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri