எரிபொருள் நெருக்கடி - விமான போக்குவரத்து தொடர்பில் வெளியான தகவல்
விமானங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு போதுமானதாக உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுரா கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கையிருப்பு போதுமானதாக உள்ளதாக அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜெட் எரிபொருள் கையிருப்பு
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எதிர்காலத்தில் மேலும் ஜெட் எரிபொருள் கையிருப்புகளை ஆர்டர் செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

துறைமுகங்களில் கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள் போதுமான அளவு உள்ளது என்றும், மூன்று தனியார் நிறுவனங்களால் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது.
இதற்கமைய, துறைமுகங்களின் செயல்பாடுகளும் வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri