முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நலம் தொடர்பில் UNP வெளியிட்ட தகவல்
புதிய இணைப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் வெற்றிகரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி (UNP) அறிக்கையொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க இன்னும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அக்கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் பிறந்த நாள் (மார்ச் 24 ) என்றும், மத அனுஷ்டானங்களுடன் அந்நாளை கொண்டாடவள்ள தமது கட்சி ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (19) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதி
ரணில் விக்ரமசிங்க, மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கிப்புறப்பட்டு சென்றிருந்த நிலையில், புதன்கிழமை (18) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளைப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு நேற்று இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும்,இந்த அறுவை சிகிச்சை பல மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவர் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளைத் தொடர்ந்து, அவர் சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து ஓய்வு எடுப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த வாரமும் இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மூன்று நாட்கள் தங்கியிருந்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026