தமிழரா, முஸ்லிமா, சிங்களவரா என்பதல்ல விடயம் - அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது! சாணக்கியன்
இங்கு தமிழரா, முஸ்லிமா, சிங்களவரா என்பதல்ல விடயம், இதுபோன்ற அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்கக் கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்களுடன் பிரதேச மக்களையும் சந்தித்து இருவரும் ஆறுதல் கூறியிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சாணக்கியன்,
“இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் ஒரு விதமாகவும், பொலிஸார் ஒரு விதமாகவும், உறவினர்கள் ஒரு விதமாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் பாரபட்சமற்ற நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு தமிழரா, முஸ்லிமா, சிங்களவரா என்பதல்ல விடயம்.
இதுபோன்ற அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்கக் கூடாதென்பதற்காகவே நாம் இங்கு வருகை தந்துள்ளோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இரா.சாணக்கியன் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திலும் கருத்து வெளியிட்டிருந்ததுடன், நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை இதற்கு முன்னர் இதுபோன்ற மற்றுமொரு சம்பவம் மட்டக்களப்பு பகுதியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri