பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த நபர்! கூட்டமைப்பினர் ஆறுதல் தெரிவிப்பு
கொரோனாச் சட்டத்தை மீறிய குற்றத்தில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் பாணந்துறை வீட்டுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் இன்று விஜயம் செய்தனர்.
கொழும்பிலிருந்து விஜயம் செய்த மேற்படி எம்.பிக்கள், உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்களுடன் பிரதேச மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவம் தொடர்பாகவும் கேட்டறிந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவர் உடனடியாகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், இதேபோன்றதொரு மற்றுமொரு சம்பவம் மட்டக்களப்புப் பகுதியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri