கனடாவில் வீட்டு வாடகை குறித்து வெளியான தகவல்
கனடாவில் புலம்பெயர்ந்தோர் அதிகமாக வசிக்கும் பிரதான நகரங்களில் ஒன்றான ரொறன்ரோவில்(toronto) வாடகை குடியிருப்பாளர்களுக்கு வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மாதத்தில் வாடகைத் தொகையானது கடந்த மாதத்தை விடவும் 0.7 வீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாடகைத் தொகையில் வீழ்ச்சி
இதன்படி இந்த மாதத்தில் சராசரி வாடகைத் தொகையானது 2782 டொலர்களாக பதிவாகியுள்ளதோடு, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலே வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறெனினும், கனடாவில் வாடகைத் தொகை மிகவும் அதிகமான நகரங்களில் ஒன்றாக ரொறன்ரோ திகழ்கின்றது.
இந்நிலையில், ரொறன்ரோவில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 2489 டொலர்கள் எனவும், இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 3270 டொலர்கள் எனவும், மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 3728 எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
