லண்டனில் இரத்தம் சொட்ட பாய்ந்து சென்ற குதிரைகளால் பரபரப்பு
மத்திய லண்டனில் இரத்தம் சொட்ட குதிரைகள் சாரதி இல்லாமல் பாய்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது ஐந்து குதிரைகள் இவ்வாறு கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளன.
அதில் இரண்டு குதிரைகளை பிடித்துள்ளதாக லண்டன் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்துடன் மோதிய குதிரை
இந்நிலையில், மத்திய லண்டனில் தற்போது சிக்கியுள்ள குதிரைகளை கண்டுபிடிக்க இராணுவம் உட்பட சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என அந்நாட்டு பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி , பிடிபட்டுள்ள இரண்டு குதிரைகளுக்கான வைத்திய நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய குதிரைகள் விரைவில் மீட்கப்படும் எனவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்த வாகனங்களில் குதிரைகள் மோதுண்டமையினால் மக்களுக்கு அசௌரியங்கள் ஏற்பட்டுள்ளன. சிலர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan