இலங்கை தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதில் தாமதம்
இந்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெறவிருந்தபோதும், இன்று வியாழக்கிழமைக்கு தேர்வு கூட்டம் மாற்றப்பட்டுள்ளது
இந்தியா ஆடவர் கிரிக்கட் அணி, ஜூலை 22 அன்று இரட்டை தொடருக்காக இலங்கைக்கு வரவுள்ளது.
தலைமைப் பயிற்சியாளர்
இந்தநிலையில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் தலைமையிலான குழு, இலங்கை சுற்றுப்பயணத்துக்காக, ஒருநாள் மற்றும் 20க்கு 20 என்ற அடிப்படையில் இரண்டு அணிகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை பயிற்சியாளராக தனது முதல் பணியில், ஒருநாள் இலங்கை தொடருக்கான இந்திய அணி மற்றும் 20க்கு 20 தலைவரை கம்பீர் தேர்ந்தெடுப்பார்.
இந்தநிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இலங்கைக்கு செல்லும் அணியில் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதனையடுத்து இலங்கைக்கான இந்திய ஒருநாள் கிரிக்கட் அணிக்கு கேஎல் ராகுல் தலைமை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்திய ஒருநாள் கிரிக்கட் அணி
அதேநேரம் 20க்கு20 போட்டிகளுக்கு சூரியகுமார் யாதவ் தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கை இடையேயான முதல் 20க்கு 20 போட்டி ஜூலை 27ம் திகதியும், மீதமுள்ள இரண்டு போட்டிகள் ஜூலை 28ம் திகதி மற்றும் ஜூலை 30ம் திகதியும் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒருநாள் போட்டிகளின், அடுத்து வரும் ஆட்டங்கள், ஆகஸ்ட் 4 மற்றும் ஆகஸ்ட் 7 ஆம் திகதிகளில் நடைபெறுகின்றன.
மேலும், இந்த அனைத்து ஆட்டங்களும் கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |