மகளிர் ஆசியக்கிண்ண இலங்கை அணி: சாமரிக்கு தலைமை பொறுப்பு
இலங்கை மகளிர் கிரிக்கட் அணியின் சகலதுறை வீராங்கனை சாமரி அத்தபத்து 2024 மகளிர் 20க்கு 20 ஆசிய கிண்ணப்போட்டிகளுக்கான, தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 மகளிர் 20க்கு 20 ஆசிய கிண்ணப்போட்டிகள் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக 15 பேர் கொண்ட அணி, கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஆசியக்கிண்ண தொடர்
இந்தப்போட்டியில் பங்களாதேஸ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய முழு உறுப்பினர் அணிகள் பங்கேற்கின்றன.
அத்துடன் மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம்;;, தாய்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம், ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள், 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளன, இலங்கை, பங்களாதேஸ், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகியவை 'பி' பிரிவில் உள்ளன.
இந்தியா - பாகிஸ்தான்
நாளை பிற்பகல் 2.00 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகம், நேபாளத்தை எதிர்கொள்வதன் மூலம் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் இந்தியா, பாகிஸ்தானை இரவு 7.00 மணிக்கு எதிர்கொள்கிறது. இலங்கையின் முதல் ஆட்டம் பங்களாதேஸ் அணிக்கு எதிராக ஜூலை 20ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் ஜூலை 26ஆம் திகதியன்று போட்டிகளில் பங்கேற்கும் இந்தநிலையில் இறுதிப் போட்டி ஜூலை 28ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |