இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ள இந்திய அணி : வெளியாகவுள்ள அணிகளின் விபரங்கள்
இலங்கையில் இந்த மாத இறுதியில் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இந்திய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் விபரங்கள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இலங்கை சுற்றுலாவில் ஓய்வு
எனவே, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விளையாடவேண்டும் என்று புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆர்வம் கொண்டுள்ளார்.
முன்னதாக குறித்த மூவருக்கும் இலங்கை சுற்றுலாவில் ஓய்வு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே பாண்டியாவின் பயணத்தவிர்ப்பை அடுத்து, புதிய யோசனையை கம்பீர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை, 20க்கு 20 போட்டிகளில் இருந்து ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஓய்வுப் பெற்றுள்ளமையால், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியக்குமார் யாதவ் இலங்கைக்கு எதிரான 20க்கு 20 போட்டிகளுக்கு தலைமையேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan
