பாகிஸ்தான் மருத்துவமனை 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

Pakistan World
By Amal Sep 18, 2026 12:04 AM GMT
Report

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் , பிறந்த 14 குழந்தைகள் பலியான தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ விசாரணையில், தீவிர சிகிச்சை பிரிவில் தீ எச்சரிக்கை அலாரங்களோ அல்லது தானியங்கி நீர் தெளிப்பான்களோ இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், மீட்புப் பணிகளின் போது அவசரகால வெளியேற்ற கதவுகள் பூட்டப்பட்டோ அல்லது தடுக்கப்பட்டோ இருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சாரக் கசிவு காரணமாக

பாகிஸ்தான் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் (PIMS) கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட அரச அதிகாரி தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

பாகிஸ்தான் மருத்துவமனை 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் | Incident Where 14 Children Died Pakistani Hospital

அதில், மின்சாரக் கசிவு காரணமாகத் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி மிகப்பெரிய பேரழிவாக மாறியதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் முறையான மற்றும் நிறுவன ரீதியான தோல்வியே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிரூட்டல் பிரிவின் மின்சார கேபிள் அதிக வெப்பமடைந்ததால் ஏற்பட்ட மின்சாரக் கசிவே தீ விபத்துக்கு மிக முக்கியக் காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.4

கட்டடத்தில் புகை கண்டறியும் கருவிகள், தீ எச்சரிக்கை அலாரங்கள் அல்லது நீர் தீயணைப்பு அமைப்புகள் செயல்படவில்லை.

அலட்சியத்திற்குப் பொறுப்பான எட்டு அதிகாரிகள்

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஊழியர்களுக்கு, பிறந்த குழந்தைகளைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தோ, அவசரகாலத்தில் ஒட்சிசன் விநியோகத்தை எவ்வாறு துண்டிப்பது என்பது குறித்தோ எவ்வித பயிற்சியும் வழங்கப்படவில்லை.

பாகிஸ்தான் மருத்துவமனை 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் | Incident Where 14 Children Died Pakistani Hospital

குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்கவே கதவுகள் பூட்டப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் நியாயம் கற்பித்தாலும், அவசரகால வழிகளை அடைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அறிக்கை கண்டித்துள்ளது.

மேலும், தீ விபத்து தொடங்கி சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகே அவசர உதவி எண்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமே அதே மருத்துவமனையின் தாதியர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு எச்சரிக்கப்பட்டும், நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.

இதையடுத்து, இந்த அலட்சியத்திற்குப் பொறுப்பான எட்டு அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்து பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கவும், அரச மற்றும் தனியார் கட்டடங்களில் தீ பாதுகாப்பு கணக்காய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மோசமாக நடந்து கொண்ட கனேடிய பெண் கைது

இலங்கையில் மோசமாக நடந்து கொண்ட கனேடிய பெண் கைது

சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் தீவில் HIV அதிகரிப்பு - வெளியான முக்கிய எச்சரிக்கை

சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் தீவில் HIV அதிகரிப்பு - வெளியான முக்கிய எச்சரிக்கை

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US