நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்

Anura Kumara Dissanayaka President of Sri lanka
By Rakesh Sep 18, 2026 04:57 AM GMT
Report

இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளது, அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றத்துக்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசின் நோக்கம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அதேபோல், நாடு அடைந்துள்ள இந்த பொருளாதார வெற்றிகளை மக்களின் வாழ்க்கைத் தரத்தை இலகுபடுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் பயன்படுத்துவதே அரசின் இலக்காகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டு பிரதானி எவன் பபகோர்ஜியோ உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் நேற்று வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

 முக்கிய கலந்துரையாடல்.. 

இந்தப் பிரதிநிதிகள் குழுவானது, இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் ஏழாவது மீளாய்வு மற்றும் '2026 4' பிரிவுக்குட்பட்டு ஆலோசனை வழங்குவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதோடு, அவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருப்பர்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல் | Goal Steer Country Era Transformation Anura States

இலங்கை தற்போது அடைந்துள்ள சிறப்பான பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் எவன் பபகோர்ஜியோ பாராட்டுத் தெரிவித்ததோடு, விசேடமாக அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட நிதி ஒழுங்கைப் பேணுவதற்காக கடந்த காலங்களில் இலங்கை பின்பற்றிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

எட்டியுள்ள இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் அரசுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையே நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் ஒரு முக்கியமான அடித்தளத்தை வழங்கியதாகவும் கூறினார்.

அண்மையில் இலங்கை முகம்கொடுத்த பாரிய இயற்கை அனர்த்தமான 'டித்வா' அனர்த்த நிலைமைக்கும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட யுத்த நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட தாக்கத்துக்கும் பலமாக முகம்கொடுப்பதற்கு அந்த பொருளாதார ஸ்திரத்தன்மை முக்கிய காரணியாக அமைந்தது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒன்றாக இணையும் ரணில் மற்றும் சஜித் தலைமையிலான கூட்டணிகள்..! வெளியிடப்பட்ட பகிரங்க அறிவிப்பு

ஒன்றாக இணையும் ரணில் மற்றும் சஜித் தலைமையிலான கூட்டணிகள்..! வெளியிடப்பட்ட பகிரங்க அறிவிப்பு

அரசாங்கம் புறம் வருமானங்கள்..  

அதேபோல், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 4.2 சதவீத மட்டத்தில் பேணிக் கொள்ள முடிந்துள்ளமையும், பொருளாதாரம் வழமைக்குத் திரும்பி வருகின்றமைக்கான முக்கியமான சமிக்ஞையாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், கடந்த இரு வருடங்களாக அரசாங்கம் வரி வருமானங்களைச் சேகரிப்பதில் காட்டிய செயற்றிறனையும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல் | Goal Steer Country Era Transformation Anura States

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முக்கியமான காரணியாக விளங்கும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக எரிசக்தி செலவுகள் தொடர்பில் மக்கள் முகம்கொடுக்க நேர்ந்துள்ள சிரமங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு உள்ளிட்ட பலரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படத்தை காட்டி பணம் வசூலித்த இளைஞர் கைது..!

மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படத்தை காட்டி பணம் வசூலித்த இளைஞர் கைது..!

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US