குற்றவாளிகளை பிடிக்க அதிரடியாக தயாராகும் பாதுகாப்பு அதிகாரிகள்
இலங்கைப் பொலிஸாருக்கு சந்தேக நபர்களைக் கைது செய்யும்போதும், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தவும் புதியதொரு தற்காப்பு சண்டைப் பயிற்சி கற்பிக்கப்படுகின்றது.
இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களின் தற்காப்புத் திறனை மேம்படுத்தவும், தேவையற்ற உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தாமல் வன்முறையாளர்களை சட்டப்பூர்வமாகக் கைது செய்யும் திறனை அதிகரிக்கவும், கிராவ் மகா (Krav Maga) தற்காப்பு சண்டை முறை பொலிஸ் பயிற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர பயிற்சி..
எதிர்வரும் நாட்களில் குறித்த கிராவ் மகா (Krav Maga) பயிற்சியானது சகல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

பொலிஸ் கல்லூரியின் பயிலுனர் பயிற்றுவிப்பாளர்களுக்காக முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த நான்கு நாள் பயிற்சித் திட்டம், 2026 செப்டெம்பர் 10 முதல் 15 வரை களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.
33 பயிலுனர் பயிற்றுவிப்பாளர்கள் உட்பட அதிகாரிகள் இந்தப் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். மேலும், இறுதி நாளில் கிராவ் மகா (Krav Maga) தற்காப்புக் கலையின் கூறுகளைக் கொண்ட ஒரு சிறப்பு செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியின் மூலம், பொலிஸ் கல்லூரியின் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கும், எதிர்காலத்தில் பல்வேறு மேம்பட்ட பயிற்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கும் கிராவ் மகா (Krav Maga) பயிற்சியை வழங்க இயலும்.
அதன் ஊடாக பொலிஸாரின் தற்காப்புத்திறன், உடல் வலிமை மேம்படுவதுடன் சட்டரீதியான கைது நடவடிக்கைகளும் இலகுவமாக மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.