லண்டனிலிருந்து புறப்பட்ட விமானத்தில் மோதல் - நடுவானில் ஏற்பட்ட பரபரப்பு
லண்டனிலிருந்து பங்களாதேஷ் நோக்கிச் சென்ற “பிமான் வங்காளதேச ஏர்லைன்ஸ்” விமானத்தில் நடுவானில் பயணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
லண்டனிலிருந்து பங்களாதேஷ் நோக்கி பயணித்த பிமான் வங்காளதேச ஏர்லைன்ஸ் விமானத்தில், நடுவானில் பயணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நடுவானில் ஏற்பட்ட பதற்றம்
இதன்போது, இரண்டு ஆண் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மோதலாக உருவெடுத்துள்ளது.

அதில் ஒருவொரு பயணியொருவரின் சட்டையும் கிழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனே விமானப் பணிப்பெண்களும்(Cabin crew) மற்ற பயணிகளும் சேர்ந்து அந்த இருவரையும் விலக்கிச் சமாதானம் செய்துள்ளனர்.
இந்தச் சண்டை தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இது குறித்து விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Another "Unruly Passenger" 👊 This time on a Biman Bangladesh Boeing 777 flight!🤦♂️ https://t.co/vnpfe0t2pz
— BiTANKO BiSWAS (@Bitanko_Biswas) January 7, 2023