13ஆவது அரசியலமைப்பு திருத்ததை நடைமுறைப்படுத்துங்கள்: கரு ஜயசூரிய கோரிக்கை
எதிர்வரும், தேர்தலுக்கு முன் 13ஆவது அரசியலமைப்பு திருத்ததை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய(Karu jayasuriya) வலியுறுத்தியுள்ளார்.
முதலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதோடு சர்ச்சைக்குரிய காணிப் பிரச்சினையை உத்தேச காணி ஆணைக்குழுவின் ஊடாக தாமதமின்றி தீர்வினைக் காணுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன மற்றும் மத அவநம்பிக்கை
நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக நாட்டில் நிலவும் இன மற்றும் மத அவநம்பிக்கையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக வடக்கில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் வெளிப்படையான மற்றும் நேர்மையான கலந்துரையாடல்களைத் தாமதமின்றி முன்னெடுக்குமாறும் கரு ஜயசூரிய அரசாங்கத்திடம் பரிந்துரைச் செய்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri