இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் பங்களிப்பால் IMF திட்டம் விரைவில் நிறைவு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவின் முக்கிய அங்கம் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இராணுவப் பயிற்சி, திறன் மேம்பாடு, விமானங்கள், கப்பல்கள் மற்றும் கப்பல் கட்டுமான உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு விரிவடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தியடையும் இலங்கை
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டம் நிறைவடையும் கட்டத்தை நெருங்கும் நிலையில், இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், இலங்கை மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்து வந்துள்ளது என்றும், இலங்கையின் பொருளாதார மீட்சி வலுவானதாகவும் நிலையானதாகவும் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவான மதிப்பீடு காணப்படுவதாக கூறிய அவர், இன்னும் பல சவால்கள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இலங்கையின் மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், டிட்வா புயலுக்குப் பின்னர் வழங்கப்பட்ட மறுசீரமைப்பு உதவித் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது எரிபொருள், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக இந்தியா 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி உதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.