மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் - விசாரணையில் வெளிவந்த உறவினருடனான பழக்கம்
மனைவி உறவினரான இளைஞர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகச் சந்தேகப்பட்டு, மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (24.11.2026) வாகரை - பால்சேனையில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 26 வயதுடையவர் என்றும், பால்சேனை கோவில் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய காளிராசா மனோஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இளைஞர் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாகரை - பால்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஜெகநாதன் சுஜீவன், காளிராசா மனோஜாவைத் திருமணம் செய்து இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கூலித் தொழிலாளியான கணவர் வேலைக்காகக் கடலுக்குச் சென்று வரும் நிலையில், அவரது மனைவி வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

அப்போது, மனைவியின் உறவினர் ஒருவருடன் மனைவிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மனைவியை கண்டித்த கணவர்
இதனையறிந்த கணவர், குறித்த இளைஞனைத் தனது வீட்டுக்கு வரவேண்டாம் எனத் தெரிவித்து கண்டித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினமான நேற்று (24) காலையில் மனைவியிடம் திருமணத்தை மீறிய உறவு தொடர்பாகக் கேட்டபோது, கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, மனைவியின் கழுத்தை நெரித்து குறித்த இளைஞர் கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு அறிவித்துவிட்டு, பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலை
இதனைத் தொடர்ந்து, குறித்த நபரைக் கைது செய்ததுடன், சம்பவ இடத்துக்குத் தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் இன்று (25.11.2026) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரம்பின் கடற்படை முற்றுகை... சீனாவில் இருந்து 1200 லொறிகளில் சரக்குகளை வரவழைத்த ஈரான் News Lankasri
திருமண மேடையில் கைவிட்ட மணமகன்..இப்போது எனக்கு கணவர் கிடைத்துவிட்டார் - பிரித்தானியப் பெண் News Lankasri