சவுதி அரேபியாவின் ரியாத் நகர் மீது ஹூதிகளின் தாக்குதல்! பலர் காயம்
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் உள்ள வானளாவிய கட்டடம் ஒன்றின் மீது ஹூதி கிளர்ச்சிப் படையினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக சிவில் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் நான்கு எகிப்தியர்கள், மூன்று நேபாளர்கள், இரண்டு இந்தியர்கள் மற்றும் இரண்டு சவுதி அரேபியப் பிரஜைகள் அடங்குகின்றனர்.
குறித்த வானளாவிய கட்டடத்தில் சவுதி அரேபியாவின் இறையாண்மைச் சொத்து நிதியத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.இது சவுதி அரேபியாவின் மிக உயரமான கட்டடமாகும்.
தாக்குதல்
சவுதி அரேபியாவுக்கும் யேமனின் ஹூதி இயக்கத்திற்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில், சவுதி அதிகாரிகள் வெளியிட்ட ஆரம்பகட்ட தகவல்களின்படி, காயமடைந்தவர்களில் இலங்கைப் பிரஜைகள் எவரும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண மேடையில் கைவிட்ட மணமகன்..இப்போது எனக்கு கணவர் கிடைத்துவிட்டார் - பிரித்தானியப் பெண் News Lankasri