வடமராட்சியில் தலை தூக்கியுள்ள சட்டவிரோத கடற்றொழில்: எழுந்துள்ள கண்டனம்
யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் தலை தூக்கி உள்ளதாக யாழ் மாவட்ட தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட தலைவர் இ. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்துக்கான ஊடக மையத்தில் நேற்று(5) ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழிலால் தொழில்களால் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்கள் பிடிபட்டு அழிக்கப்படுகின்றது.
விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை
இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு சமாசம் உட்பட கடற்றொழில் அமைச்சருக்கும் நீரியல்வளத் திணைகள் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் கைது செய்யப்படுவர்களை முல்லைத்தீவு அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். படகுகளை தடுத்து வைக்கிறார்கள். ஆனால் வடமராட்சி கிழக்கு பகுதியில் உடன் விடுவிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
