மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேர்.. அநுர அரசாங்கத்தை குறிவைக்கும் மகிந்த கூட்டணி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டமையானது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, நிட்டம்புவ பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தாக்குதலில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், நீதிமன்றம் இந்த படுகொலை விவகாரத்தில் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்காத வகையில், இலங்கை பொதுஜன கட்சி தரப்பினர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
தற்போதைய அரசாங்கமான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
இவ்விடயங்கள் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan