பொலிஸாரால் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு.. தமிழர் பகுதிகளில் தொடரும் பரபரப்பு இரவுகள்
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில், நேற்று நள்ளிரவு கெப் ரக வாகனம் ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12.45 மணியளவில், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தகவல் வழங்கியுள்ளார்.
இதன்போது, துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தின் சக்கரத்தில் சிதைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்சக்களை பாதுகாக்க பெரும் பாடுபடும் இலங்கை தேரர்கள்: சமாதானத்திற்காக திரளும் வெளிநாட்டு தேரர்கள்!
சட்டவிரோத நடவடிக்கை
அதேநேரம், குறித்த கெப் ரக வாகனத்தின் உரிமையாளரால், கடந்த வாரம் டிப்பர் வாகனத்தில் மண் கொண்டு செல்லப்பட்ட போதும் தர்மபுரம் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையில், கடந்த 10ஆம் திகதி அதிகாலை 1.18 மணியளவில் யாழ். மண்டைதீவு பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


