புதுக்குடியிருப்பில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை

Sri Lanka Police Mullaitivu Crime Branch Criminal Investigation Department Crime Drugs
By Shan Jan 05, 2024 06:03 PM GMT
Report

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் விற்பனைக்கு தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த முற்றுகை நடவடிக்கை இன்று (05.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரருக்கு டெங்குத் தொற்று

இலங்கை அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரருக்கு டெங்குத் தொற்று

இளைஞர்கள்  நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி கிராம அலுவலர் பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கிராம அமைப்புக்கள் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை | Illegal Activity In Pudukudiriru

அந்தவகையில் தமது கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை இனம்கண்டு அவர்களை பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து தமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

நியூசிலாந்து நாடாளுமன்றில் பழங்குடி இளம் பெண் எம்.பியின் அதிர வைத்த வெற்றி முழக்கம்

நியூசிலாந்து நாடாளுமன்றில் பழங்குடி இளம் பெண் எம்.பியின் அதிர வைத்த வெற்றி முழக்கம்

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி 

இதற்கமைய புதுக்குடியிருப்பு திம்பிலி கிராமத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் இன்றையதினம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைவாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் , பொலிஸ் கொஸ்தாபல்களான ஜே.நிக்கலஸ் (91796) , பி.விதுரன்( 96522) , வி.கவிராஜ் (105152), அபயகோன் (80425) உள்ளிட்ட பொலிஸார், கிராம சேவையாளர் தமிழ் செல்வன், கிராம அபிவிருத்தி சங்கம், கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை | Illegal Activity In Pudukudiriru

அப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் உட்பட்ட குழுவினர் விற்பனைக்கு தயாரான நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டிருந்தது. எனினும் சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

திம்பிலி கிராம மக்கள் மற்றும் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு எனவும், போதைபாவனையை ஒழிக்க முன்வந்திருந்தமை பாராட்டத்தக்கது என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை | Illegal Activity In Pudukudiriru

புதுக்குடியிருப்பில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை | Illegal Activity In Pudukudiriru

புதுக்குடியிருப்பில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை | Illegal Activity In Pudukudiriru

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொடருந்து இயந்திரங்கள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொடருந்து இயந்திரங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US