முத்தரப்பு தொடரில் பெதும் நிஸ்ஸங்க இல்லை! இலங்கை அணியில் அதிரடி மாற்றம்
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் எதிர்வரும் ஒருநாள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெதும் நிஸ்ஸங்க (Pathum Nissanka) காயம் காரணமாக விலகியுள்ளார்.
போட்டிக்குரிய மருத்துவ அனுமதியை அவர் இன்னும் பெறாததே இதற்குக் காரணமாகும்.
முத்தரப்புத் தொடர்
இங்கிலாந்துக்கு எதிரான இலங்கையின் அண்மைய சுற்றுப்பயணத்தின் போது,பதும் நிஸ்ஸங்கவுக்கு இடது கால் தொடைப்பகுதித் தசைநார் காயம் (hamstring injury) ஏற்பட்டது.

இந்த நிலையில், அவரது காயம் முழுமையாகக் குணமடையாததால், அவர் விளையாடத் தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டு இந்த முத்தரப்புத் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இந்த தொடருக்கான இலங்கையின் ஒருநாள் அணியில் பெதும் நிஸ்ஸங்கவுக்குப் பதிலாக லஹிரு உதார (Lahiru Udara) மாற்று வீரராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri