உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கை! ஆசியாவின் சிறந்த கடற்கரைகள் பட்டியலில் புதிய சாதனை
2026 ஆம் ஆண்டிற்கான 'கொண்டே நாஸ்ட் டிராவலர்' (Condé Nast Traveller) வாசகர்களின் விருப்பத் தெரிவு விருதுகளில் (Readers' Choice Awards) ஆசியாவின் சிறந்த 20 கடற்கரைகளில் இலங்கையின் நான்கு கடற்கரைகள் இடம்பெற்றுள்ளன.
இதில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அருகம்குடா (Arugam Bay) ஆசிய அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
அருகம்குடா
அருகம்குடா 98.84 புள்ளிகளுடன் ஆசிய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அத்துடன், இது சர்வதேச அளவில் புகழ்பெற்ற அலைச்சறுக்கு விளையாட்டுத் தளமாகவும் கருதப்படுகிறது. பேருவளை - பெந்தோட்டை (Bentota) கடற்கரை 88.33 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

தங்காலை (Tangalle) கடற்கரை 83.33 புள்ளிகளுடன் 14ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
நீர்கொழும்பு (Negombo) கடற்கரை 78.92 புள்ளிகளுடன் 19ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
பிராந்தியப் பட்டியலில் தாய்லாந்தின் ரெய்லே கடற்கரை (Railay Beach) 94.44 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், மலேசியாவின் பங்கோர் தீவிலுள்ள கோரல் கடற்கரை (Coral Beach) 93.33 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri