வெடிக்கப்போகும் அரசுக்கு எதிரான போராட்டம் : நாளை நடக்கப்போவது என்ன..!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் மற்றும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, நாளைய தினம் (30.11.2026) தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டங்கள் அரசைக் கவிழ்ப்பதற்கான திட்டமாகவே பார்க்கப்படுகின்றன என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வரும் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளைய தினம் (30) இடம்பெறவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்கள் அரசைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டமாகவே பார்க்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கையிருப்பு அவசியம் என்பதை நாட்டிலுள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெற்றன. ஆனால், அவர்களின் ஊழல்களால் தானே நாடு இவ்வளவு பெரிய வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதேவேளை, தவிசாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும்போது, அது ஒரு திட்டமிட்ட சம்பவமாகவே தெரிகிறது. காணொளி எடுத்தவர் ஓர் இஸ்லாமியர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இனவாதத்தைத் தூண்டிவிட்டு, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஊழல்வாதிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில், அரசுக்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என்றார்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
ஒரேயடியாக 10,000 பேர்கள்... ஜேர்மனியின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் அதிரடி முடிவு News Lankasri