எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, குறித்த விலை குறைப்பானது இன்று (29) நள்ளிரவு 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும்.
அந்தத் திருத்தத்திற்கு அமைய, ஒக்டேன் 92 லங்கா பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 30.00 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 394 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.
இந்தப் புதிய விலை திருத்தம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்றும், இது குறித்த மேலதிக விவரங்களை 0117-296130 அல்லது 0117-296248 என்ற எண்களில் அழைப்பதன் மூலம் கழகத்தின் ஊடகப் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.