சர்வதேச ரீதியில் நடந்த சமையல் போட்டியில் இலங்கை தமிழரின் சாதனை
மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள லக்சம்பர்க்கில் நடைபெற்ற உலகக் கோப்பை சமையல் போட்டியில், இலங்கைத் தேசிய அணியில் இடம்பிடித்து மூன்று பதக்கங்களை வென்று ரவிராஜ் தனுராஜ் சாதனை படைத்துள்ளார்.
கடந்த நவம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் போட்டியில், இரண்டு பிரிவுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கங்களையும், ஒரு பிரிவில் மூன்றாம் இடத்தையும் அவர் வென்றுள்ளார்.
முதல் இலங்கைத் தமிழர்
மாஸ்டர் செஃப் ஸ்ரீலங்கா (MasterChef Sri Lanka) நடுவர் உட்பட, சினமன் கிராண்ட் (Cinnamon Grand), ஹில்டன் (Hilton), சங்ரி-லா (Shangri-La) உள்ளிட்ட முன்னணி நட்சத்திர ஹோட்டல்களின் தலைமைச் சமையல் கலைஞர்களுடன் இணைந்து ஒரே அணியாகப் போட்டியிட்டு இவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இலங்கைத் தேசிய அணியின் பாஸ்தா (Pasta) பிரிவில் இடம்பிடித்த முதல் இலங்கைத் தமிழர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
லண்டனில் வசித்து வரும் ரவிராஜ் தனுராஜ், ஆண்டுதோறும் நடைபெறும் உணவுத் திருவிழாக்களிலும் பங்கேற்று வருபவர்.
உலக அரங்கில் தமது திறமையை வெளிப்படுத்திப் பதக்கங்களை வென்ற ரவிராஜ் தனுராஜுக்குப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.