காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (29) பிற்பகல் 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எச்சரிக்கை அறிவிப்பு
இதற்கமைய, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டாஹின்ன, ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை, பசறை ஆகிய பகுதிகளும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, புலத்சிங்கள ஆகிய பகுதிகளும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, தும்பனை, ஹத்தரலியத்த, உடபலாத்த, கங்க இஹல கோரளை, தொழுவ, உடுநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, மாவனல்லை, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யட்டியாந்தோட்டை, ரம்புக்கனை ஆகிய பிரிவுகளும், மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை பிரிவும், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ கோரளை, தலவாக்கலை ஆகிய பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, கிரியெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் விழிப்புடன் இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.