18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்
நாட்டின் 11 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கத்திற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (29.11.2026) பிற்பகல் 1 மணி முதல் இரவு 11:59 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பானது செல்லுபடியாகும்.
அதன்படி, மாலை அல்லது இரவு நேரங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பல இடங்களில் இடியுடன் கூடிய கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும், பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லையும் உள்ளடக்கியது; கம்பஹா மாவட்டத்தில் பியகம, களனி, மஹர, வத்தளை மற்றும் வீகே; ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அங்குனகொலபெலஸ்ஸ, பெலியத்த, கட்டுவன, ஒகேவெல, தங்கல்ல, மற்றும் விரகெட்டிய ஆகிய பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல மற்றும் யட்டியந்தோட்டை; மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பங்கமுவ கோரளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பலத்த காற்று மற்றும் கனமழையும் பெய்யக்கூடும் என்பதால், திறந்தவெளியில் உள்ள மக்களுக்குக் கடுமையான காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு சேதம் ஏற்படக்கூடும் என்றும், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளில் இடையூறு ஏற்படக்கூடும் என்றும், மேலும் வெளிப்புறப் பணிகள், விளையாட்டு, விவசாய நடவடிக்கைகள், பொது நிகழ்வுகள் மற்றும் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது மின் சாதனங்கள், குழாய்கள் மற்றும் மின் கம்பிகளால் இணைக்கப்பட்ட மின் அமைப்புகளிலிருந்து விலகி இருக்குமாறும், வெளிப்புற நிகழ்வுகளை ரத்து செய்யவோ அல்லது பாதுகாப்பான உட்புற இடங்களுக்கு மாற்றவோ, மேலும் குழந்தைகள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களை வீட்டிற்குள் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.