முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தங்க விலை! 2027 ஆம் ஆண்டு ஏற்படவுள்ள மாற்றம்
சர்வதேச முதலீட்டாளர்கள் இந்த மாதம் தங்கத்தில் முதலீடு செய்வதை பெருமளவில் குறைத்துள்ளமையினால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதாக தெரியவருகின்றது.
சர்வதேச பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டொலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் ஆகியவை 2027 ம் ஆண்டில் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக அமையலாம் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
2027 ஆம் ஆண்டு ஏற்படவுள்ள மாற்றம்
2027 ஆம் ஆண்டு இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,650 அமெரிக்க டொலரை எட்டலாம் எனக் கணித்துள்ளது. இதன்படி, தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புகள் இருந்தாலும், மீண்டும் உயர்வதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.

எனவே, விலை குறைப்பிற்கு காத்திருக்காமல் தற்போது தங்கம் வாங்குவது சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை தொடர்ச்சியாக சரிவை நோக்கி சென்று வரும் நிலையில், தங்கத்தின் விலை நிலவரம் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.