பெரு நாட்டில் உலங்கு வானூர்தி விபத்து – 8 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பெரு நாட்டின் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலுக்குப் பெய ர்பெற்ற தொலைதூரப் பகுதியில் ஏற்பட்ட உலங்கு வானூர்தி விபத்தில் 8 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதிகாரிகளின் தகவலின்படி, இராணுவ ரோந்துப் படையினரை வெளியேற்றும் மீட்புப் பணிக்காகச் சென்ற உலங்கு வானூர்தியே, சனபாம்பா (Sanabamba) நகருக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான காரணம்
இந்தப் பகுதி அபுரிமாக், ஏனே மற்றும் மந்தாரோ ஆறுகள் சங்கமிக்கும் பள்ளத்தாக்குப் பகுதியில் (VRAEM) அமைந்துள்ளது.

இந்தப் பகுதி 'கொக்கேய்ன் பள்ளத்தாக்கு' (Cocaine Valley) எனவும் அழைக்கப்படுகிறது. பெருவின் மிகப்பெரிய கொக்கோ பயிர்ச்செய்கைப் பகுதியாக விளங்கும் இங்கு, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களும் முன்னாள் ஷைனிங் பாத் (Shining Path) கிளர்ச்சிக் குழுவின் எஞ்சிய உறுப்பினர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உலங்கு வானூர்தியின் விமானி மட்டுமே உயிர் தப்பியுள்ளதாக பெரு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.