கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை! தப்பியோடிய சந்தேகநபர் மீது யானை தாக்குதல்
அநுராதபுரம் - எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹஇலுபள்ளம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (27.11.2026) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் மஹஇலுபள்ளம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை
உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த ஆண் ஒருவர், பணம் தொடர்பான தகராறு காரணமாகக் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்த பின்னர், சந்தேகநபர் அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் செல்லும் வழியில் காட்டு யானைத் தாக்குதலுக்குள்ளாகி, காயமடைந்த நிலையில் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை
அத்துடன், அவர் விஷம் அருந்தியிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.