நாட்டின் பல பகுதிகளுக்கு மாலை 4 மணிவரை அவசர எச்சரிக்கை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI), இலங்கையின் ஏழு மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நேற்று (27) இரவு 9.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று (28) மாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதலாம் நிலை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்கள்
- பதுளை: ஹல்துமுல்லை, பசறை.
- களுத்துறை: பாலிந்தநுவர, புலத்சிங்கள.
- கண்டி: யட்டிநுவர, தும்பனே, ஹத்தரலியத்த, உடபலாத்த, கங்க இஹல கோரளை, உடுதும்பர, தொலுவ, உடுநுவர.
- கேகாலை: அரநாயக்க, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, மாவனெல்ல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யட்டியந்தோட்டை, ரம்புக்கனை.
- மாத்தளை: ரத்தோட்டை.
- நுவரெலியா: கொத்மலை கிழக்கு, நில்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, நோர்வூட், அம்பகமுவ கோரளை, தலவாக்கலை, வலப்பனை.
- இரத்தினபுரி: குருவிட்ட, கிரியெல்ல

வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மலைச்சரிவுகள் மற்றும் செங்குத்தான நிலப்பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள், மலைச்சரிவுகள் இடிந்து விழுதல், பாறைகள் உருண்டு விழுதல், மண் சரிவு ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவதானமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய காலநிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.