இலங்கையில் இருந்து வெளிநாட்டவர்கள் சிலர் அதிரடியாக நாடு கடத்தல்
இலங்கையில் இருந்து 5 சீன நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சீன அரசாங்கத்தினால் தேடப்பட்டு வந்த குற்றம் சாட்டப்பட்ட 05 சீனப் பிரஜைகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைந்திருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீன அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, வெலிசறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தல்
இந்தச் சீனப் பிரஜைகள் இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்ட விதிகளை மீறி இந்நாட்டில் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

5 சீனப் பிரஜைகளும் வெலிசறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததன் பின்னர், சீனா நோக்கிப் பயணிக்கும் 02 விமானங்கள் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் 08 அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் முதலாவது தொகுதியான மூன்று சீனப் பிரஜைகளும், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் 05 அதிகாரிகளுடன் நேற்று முன்தி இரவு 08.50 மணியளவில் சைனா ஈஸ்டர்ன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஷாங்காய் நகருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சீன அரசாங்கம்
அன்று இரவு 10.25 மணிக்கு எயார் சைனா விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் எஞ்சிய இரண்டு சீனப் பிரஜைகளும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சீனாவின் செங்டு நகருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட 05 சீனப் பிரஜைகளையும் சீனாவின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாடு கடத்தலுக்கான விமானப் பயணக் கட்டணங்களை சீன அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri