மாவீரர் நினைவேந்தலைப் பார்வையிட வந்த இளைஞருக்கு விளக்கமறியல்..! அதிரடி உத்தரவு
முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர் நினைவேந்தலைப் பார்வையிட வந்த 32 வயதுடைய ஒருவரை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(27.11.2026) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வைப் பார்வையிடச் சென்ற குறித்த நபர் தடைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் இலட்சினைகள் மற்றும் படங்கள் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
PTA சட்டத்தின் கீழ் விளக்கமறியல்
யாழ்ப்பாணம், உடுவில் தெற்கு சுண்ணாகம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் அணிந்திருந்த ஆடை இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் இலட்சினைகள் மற்றும் படங்கள் பொறிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவரைக் கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், குறித்த நபருக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து இன்று(28.11.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன் தொடர்ந்து, அவர் யாழ். சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.