ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்! இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் நாளைய(30.11.2026) சுகயீன விடுப்புப் போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி, அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(29.11.2026) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சம்பள முரண்பாடு
நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் காணப்படும் சுபோதினி ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பள முரண்பாடு மற்றும் மாணவர்களின் போசாக்கு உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதன்போது அவர் வலியுறுத்தினார்.

எனவே, நாளைய தினம் அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் தமது பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட தீபன் திலீசன், மாணவர்களின் பாதுகாப்பையும் பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.
you may like this..
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
அதிகாரத்தை இழக்கும் அபாயம்... எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய அரசாங்கத்திற்கு முயலும் நெதன்யாகு News Lankasri
ஒரேயடியாக 10,000 பேர்கள்... ஜேர்மனியின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் அதிரடி முடிவு News Lankasri