அமெரிக்கா செல்லத் திட்டமிடுவோருக்கு வெளியான கடும் எச்சரிக்கை!
அமெரிக்காவிற்குப் பயணம் செய்யத் திட்டமிடும் இலங்கையர்களுக்கு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
பயணத்தின் போது ஏற்படக்கூடிய எதிர்பாராத செலவுகள், பயணத் தடங்கல்கள் மற்றும் அவசர மருத்துவத் தேவைகளைச் சமாளிப்பதற்குப் போதுமான நிதி வசதி இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
விசா உரிமை
அத்துடன், விசா நேர்காணலுக்குச் சிறந்த முறையில் தயாராகிச் செல்லுமாறும், அமெரிக்காவிற்குள் நுழைந்த பின்னர் அந்நாட்டு அரசாங்கத்தின் பொது நலன்புரி உதவிகளில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் உண்மையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விசாவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் போலி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறும் அமெரிக்கத் தூதரகம் கடுமையாக எச்சரித்துள்ளது.

போலி ஆவணங்களைச் சமர்ப்பிப்பது மோசடியாகக் கருதப்படுவதுடன், இதன் காரணமாக தற்போதைய விசா உரிமையை இழக்க நேரிடலாம்.
அத்துடன், எதிர்காலத்தில் அமெரிக்க விசாவைப் பெறுவதற்கும் நிரந்தரத் தகுதியிழப்பு ஏற்படக்கூடும் எனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, அமெரிக்காவிற்குப் பயணம் செய்யத் திட்டமிடுவோர் விசா விண்ணப்பத்தின் போது உண்மையான தகவல்களையும் உரிய ஆவணங்களையும் சமர்ப்பிப்பதுடன், தமது பயணச் செலவுகளை ஈடுசெய்வதற்கான நிதி வசதியையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri