சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன்! ஜனாதிபதி அநுரவிற்கு நினைவுப்படுத்தும் டக்ளஸ்

Anura Kumara Dissanayaka Douglas Devananda Galagoda Aththe Gnanasara Thero Prisons in Sri Lanka Prison
By Theepan Oct 15, 2026 11:01 AM GMT
Report

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு எழுதியுள்ள அவசர கடிதத்திலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும், பௌத்த மதத் தலைவர்களுள் ஒருவரான கலகொட அத்தே ஞானசார தேரருக்கான சிறை தண்டனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரருக்கு சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமைவாக ஆடைகள் வழங்கப்பட்டமை நாட்டில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது.

அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கை

பௌத்த மத பீடங்களும் இது தொடர்பாக கரிசணை காட்டி வருகின்ற நிலையில், குறித்த விவகாரத்தினை சுமூகமாக தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன்! ஜனாதிபதி அநுரவிற்கு நினைவுப்படுத்தும் டக்ளஸ் | Douglas Reminded The President Anura

குறுகிய அரசியல் நலன்களுக்கு இவ்விவகாரம் பயன்படுத்தப்பட்டு நாட்டில் தேவையற்ற அசௌகரியங்களுக்கு இடமளிக்காத வகையில் தங்களின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பபடும் விரைவான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், சட்ட ரீதியான திருத்தங்கள் ஊடாக குறித்த விவகாரத்திற்கான நிரந்தர தீர்வு உறுதிப்படுத்துகின்றபோது, சிறைகளில் அடைக்கப்படுகின்ற ஏனைய மதத் தலைவர்களும் கௌரவமாகவும், கண்ணியமாகவும் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் சட்டத் திருத்தங்களில் தெளிவாக உள்ளடக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

நினைவிற்கு வரும் வெம்பிய தருணங்கள்

80களில் வெலிக்கடை, மட்டக்களப்பு போன்ற சிறைச்சாலைகளில் நான் இருந்த காலத்தில் சக கைதிகளாக இருந்த மதத் தலைவர்கள் அநாகரீகமாக நடத்தப்படுவதை பார்த்து வெம்பிய தருணங்கள் நினைவிற்கு வருகின்றன.

பின்னர், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த காலத்தில், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் தலைவர்கள் கடிதங்கள் மூலமும் தங்களின் உறவினர்கள் ஊடாகவும் சிறைகளில் எதிர்கொள்கின்ற அசௌகரியங்களை எனக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன்! ஜனாதிபதி அநுரவிற்கு நினைவுப்படுத்தும் டக்ளஸ் | Douglas Reminded The President Anura

அவை தொடர்பாக சம்மந்தப்பட தரப்பினருடன் தொடர்பு கொண்டு அவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு தீர்வுகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான அனுபவம் உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகின்றேன்.

எனவே தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அனைத்து மதத் தலைவர்களும் சிறை சாலைகளில் கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடாத்தப்படுவதை சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றேன் என தெரிவித்துள்ளார். 

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்

இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US