பிள்ளைகளின் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தாய் - கணவன் கைது
குருநாகல், நிகவரட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த கொலை தொடர்பில் நிகவரட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் நிகவரட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தாய்
உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 49 வயதுடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை நிகவரட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.