அனோஜனின் மரணதண்டனையை இரத்துச் செய்திருப்பது முழு நாட்டுக்கும் நிம்மதியளிக்கின்றது: மனோ எம்.பி
சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான பொறியியலாளர் சிவராசா அனோஜனின் மரணதண்டனையை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் இரத்துச் செய்திருப்பது முழு நாட்டுக்கும் நிம்மதியளிக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "அனோஜனின் மரணதண்டனையை இரத்துச் செய்து நெகிழ்வுப் போக்கை வெளிப்படுத்திய சவூதி அரேபிய அரசுக்கும், அந்த நாட்டின் இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கை அரசாங்கம்
ஆட்சியில் உள்ள அரசு என்ற ரீதியில் இலங்கை அரசு இந்த விடயத்தில் தனது பொறுப்பை மிகச் சரியாக நிறைவேற்றியுள்ளது.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், பொதுமக்களும் நம்பிக்கை மற்றும் பிரார்த்தனையின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.ஒரு நாடு என்ற வகையில் இது நாம் அனைவரும் இணைந்து பெற்ற முதல் வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan