இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்த மருத்துவக் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை 4:00 மணிக்கு வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மருத்துவக் குழு பரிந்துரைகளை்
அவரின் உடல்நிலை குறித்து கண்காணிக்கும் மருத்துவக் குழுவில் 14 மருத்துவர்கள் அங்கம் வகிப்பதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் சம்பத் இந்திக குமார தெரிவித்தார்.

ஷிரந்தி ராஜபக்சவின் இதயம் தொடர்பான உடல்நிலை மற்றும் அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் குறித்து இந்த மருத்துவக் குழு பரிந்துரைகளை வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 மில்லியன் ரூபாய் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, நாளை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan