இளம் யுவதி தீயில் கருகி பரிதாபப் பலி! பெட்ரோல் ஊற்றி கழிவுகளை எரிக்க முயன்றபோது சோகம்
பொலன்னறுவை, தமன்கடுவை பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
தமன்கடுவைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் சேகரிப்பட்டுக் கிடந்த கழிவுப்பொருள்களைப் பெட்ரோல் ஊற்றி எரித்து அழிக்க முற்பட்டபோதே எதிர்பாராதவிதமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ மளமளவெனப் பரவியதில் சம்பவ இடத்திலேயே அந்த யுவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் யுவதியின் பெற்றோர் சிறிய தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam