ஷிரந்தி ராஜபக்சவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்

Mahinda Rajapaksa Shiranthi Rajapaksa Money FCID - Financial Crimes Investigation Division
By Vethu Oct 14, 2026 04:11 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற குறுகிய காலத்திலேயே, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச பல்வேறு அமைப்புகளை உருவாக்கி நிதி சேகரிக்கத் தொடங்கியமை நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து சிரிலிய கணக்கிற்குத் தவறான முறையில் நிதி சேகரிக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட  இவ்வழக்கில்,  முறைப்பாட்டாளர்  சார்பில்  முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முக்கிய தகவல்களை முன்வைத்தார்.

மோசடிகள் அம்பலம்

அதற்கமைய, 2006ஆம் ஆண்டில் ஷிரந்தி நவோதய என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, பின்னர் சிரிலிய சவிய எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, கால்டன் சுவ உதானய என்ற பெயரில் மற்றுமொரு அமைப்பும் உருவாக்கப்பட்டு, அதற்காக ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ முகவரி மற்றும் அரச இலட்சனை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளை பயன்படுத்தி நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்சவின் மேலும் பல மோசடிகள் அம்பலம் | Shiranthi Rajapaksas Fraud Revealed  

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு CT Scan இயந்திரமொன்றை நன்கொடையாக வழங்கவுள்ளதாக தெரிவித்து நிதி சேகரிப்பதற்காக தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை காப்பீட்டு  நிறுவனம், தேசிய லொத்தர் சபை மற்றும் செலான் வங்கி ஆகியவற்றுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பின்னர், கால்டன் சுவ உதான அமைப்பின் கணக்கு செயலிழந்துள்ளதால், சிரிலிய கணக்கிற்கு மாற்றப்பட்ட நிதியை வைப்பிலிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபா தொகையை அக்கணக்கில் வைப்பிலிட்டமை தொடர்பிலேயே வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


பேஸ்புக் ஊடாக மணமகன், மணமகள் தேடுவோருக்கு அவசர எச்சரிக்கை

பேஸ்புக் ஊடாக மணமகன், மணமகள் தேடுவோருக்கு அவசர எச்சரிக்கை

மகிந்தவின் தற்போதைய நிலை.. இரகசியம் பேணும் மொட்டுத்தரப்பு

மகிந்தவின் தற்போதைய நிலை.. இரகசியம் பேணும் மொட்டுத்தரப்பு

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US